கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு,
போன்றவையே சிறுதானியங்கள். இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை
போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து
மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும்
வைட்டமின்களை கொண்டது.
பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன்,
ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
வரகு
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது.
இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம்.. வரகில்
மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு
உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள்
நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும்
இருக்கிறது.
இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம்
மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப
உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான
சக்தியையும் கொடுக்கும்.
இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.
இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச்
சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
மூட்டுவலியைக் குறைக்கிறது.
சாமை
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து.
நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை
உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும்
தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும்
அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின்
முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.
பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு
பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை
என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.
நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.
வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது
பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில்
சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும்
தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பெ¡ருட்களை உண்பதைத் தவிர்த்து,
இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கெ¡ள்ளும் போது உடல்
ரீதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.
கம்பு
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. நம் முன்னோர்கள்
தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.
காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது
போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த
தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே
இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை
செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.
இந்த உஷ்ணத்தை கம்பு போக்குகிறது.
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம்
அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பு உதவுகிறது.
அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய்
புண்னை கம்பு குணப்படுத்தும்.
கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்
சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் ,
மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல
உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய
காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை
விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில்
உள்ளது.
கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால்
வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம்
சரி பண்ணலாம்.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும்
அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத
அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு
ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை
நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
- உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்.
- கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
- இதயத்தை வலுவாக்கும்.
- சிறுநீரைப் பெருக்கும்.
- நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
- இரத்தத்தை சுத்தமாக்கும்.
- உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
- நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
- தாதுவை விருத்தி செய்யும்.
- இளநரையைப் போக்கும்.
குதிரைவாலி
குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ்
அடங்கியுள்ளது. ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. கோதுமையை விட ஆறு
மடங்கு நார்ச்சத்து உள்ளது.
சோளம்
சோளத்தில், ஆற்றல், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம்,
இரும்புசத்து, பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின், நயசின் ஆகிய
சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்:
- நீரிழிவு நோய், செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
- சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
- கண் குறைபாடுகளை சீர் செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
திணை
பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை
தினை தான். அதுவும் கி.மு 6000 விலேயே சீனாவில் பயிரடப்பட்டு
உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான
புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இது இதயத்தை
பலப்படுத்தும். பசி உண்டாக்கும்.
ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள்,
மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.
ராகி (எ) கேழ்வரகு
ராகியின் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணி விட
வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான
உணவாகும்.
அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் புரதம்,
தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும்
இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்ணை
குணபடுத்தும். சர்க்கரை நோய், ரத்த சோகையை குணமாக்குகிறது. உடலுக்கு வலிமை
தரும்.
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம்,
பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரோட்டின், நயசின்,
ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும்
நிறைந்துள்ளன.
ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும்.
இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.
இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு
நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.
ராகியில், ஆற்றல், கொழுப்பு, உலோகம், கால்ஷியம், பாஸ்பரஸ், அயன், விட்டமின்
ஏ, ஆகிய சத்துக்கள் உள்ளன.
ராகி, ரத்தத்தை சுத்தி செய்யும். எலும்பை உறுதிப்படுத்தும். சதையை
வலுவாக்கும்.
மலச்சிக்கல் ஒழியும். அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.
பனிவரகு
பனிவரகில், கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி
காம்ளக்ஸ், தாதுக்கள், கொழுப்பு, கலோரிகள், தயாமின், ரிபோஃப்ளோவின்,
நயாசின், கோலின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு,
துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.
மருத்துவ பயன்கள்:
- நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும்.
சருமத்தை மினுமினுக்க வைக்கும். நரை, மூப்பை தள்ளிப்போடும். எலும்புகளை
அடர்த்தியாக்கும். இதயத்தை பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.
கல்லீரல் கற்களை கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணு
குறைபாடுகளை போக்கும்.
- அலர்ஜியை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அறுவை
சிகிச்சையால் ஏற்பட்ட புண்களை விரைவில் ஆற்றும். உடல் பருமனை குறைக்கும்.
மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது
என்பதால் கர்பிணி பெண்களுக்கு ஏற்றது. மன உளைச்சலை குறைக்கும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை போக்கும்